இது தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் நிகழ்வொன்று இன்று 2014.12.23 ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்றது.
இங்கு கருத்துத்தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று மிக முக்கியமான நாளாகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெ ளியிட்டு வைத்துள்ளார் .2005ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மஹிந்த சிந்தனை மற்றும் மஹிந்த சிந்தனை இதிரி தெக்ம என்பன வெ ளியிட்டுவைக்கப்பட்டன. இவற்றின் அடிப்டையிலேயே அரசு தனது கொள்கைகளை முன்னெடுத்தது.இதன் மற்றுமோர் அங்கமாவே இன்று வெ ளியிட்டு வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனை லோவ தினன மக வெளியிட்டு வைக்கப்படுள்ளது.
இது மைத்திரிபாலவின் குறுகிய கால சிந்தனை போன்றல்லாது நீண்ட காலத் திட்டமாகும்.இதனை மக்கள் வாசித்து விளங்கிக் கொள்ள முடியும் .நாட்டைக் கட்டியெழுப்பி உலகை வெல்வதே இதன் நோக்காகும். இதில் 20 பிரதான அம்சங்கள் குறிப்பிடப்படுள்ளன.இதில் அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் உட்படசகல துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதில் .அவற்றை அடைந்துகொள்ளும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்த முக்கிய அம்சங்களும் மைத்திரிபால சிரசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை .அது வெறும் கலடண்ரைப் போன்ற எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதிமைச்சர் சீ.புத்திரசிகாமணி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தான் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்ததுடன் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஜே.ஆர் ஜயவர்தன முதல் இந்த நாட்டில் நடை பெற்ற அனைத்து தேர்தல்களிலும் தான் வேலை செய்துள்ளதாகவும் இன்று மலையகத்தில் ஒரு போதும் நடை பெற்றிராத அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன.ஐந்து ஜனாதிபதிகளுடன் செயற்பட்ட எனக்கு உள்ள அனுபவத்தைக் கொண்டு பார்க்கின்ற போது எதிர்வரும் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாத்திபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார்.இவரின் வெற்றியில் நாமும் பங்கு கொண்டு அவருக்கு வாக்களித்து நமது மலையகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முன்னரை விட பன்மடங்கு அபிவிருத்திகள் நடைபெற்றுள்ளதை நாம் சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தோட்டங்களை தேசிய மயமாக்கிய இவ்வரசு தோட்டப் பாடசலைகளை அபிவிருத்தி செய்துள்ளது .இதன் மூலம் பாடசலைகள் பௌதீக ரீதியில் அபிவருத்தி செய்யப்பட்டதுடன் தற்போது தோட்ட மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் பாடசலைகள் சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன .இதே போன்று வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன இதை விடவும் இலவச மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளன இதே போன்று மலையக மக்களின் நன்மை கருதி தமிழ் பேசும் கிராம உத்தியோகத்தர்கள் நியமனம் செய்யப்பட்டனர் .நீண்ட காலமாக பெரும் குறைபாடாக இருந்த ஆசிரியர் பற்றாக் குறையை நீக்கும் பொருட்டு மலையகத்தில் ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதே போன்று இன்று நாட்டில் காணப்படும் நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க வேண்டும் என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.ஆனால் நிறைவேற்று அதிகார முறையினாலயே சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிசெய்யபட்டுள்ளது என்பதை சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இம்முறையில் காணப்படும் குறைபாடுகளை மாற்ற நடவடிக்கைகளை கட்சிகள் கலந்துரையாடி மேற் கொள்ள முடியும்..நாட்டில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் இவ் வேளையில் நாம் அவருக்கு வாக்களித்து அவரின் வெற்றிக்கு உதவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான ரீ.பி.ஏகநாயக்க,விமல் வீரவன்ஸ ,ஐக்கிய தேசியக் கட்சியின் பொளன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி விஜயசிங்க ஆகியோரும் கருத்துத்தெரிவித்தனர்.
Leave a comment