இது தொடர்பாக அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று ஞாயிற்றுக் கிழமை 2014-12-21 கொழும்பிலுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் க்டசி தலைமையகத்தில் சங்கத்தின் தலைவர் கே.டி. அல்விஸ் தலைமையில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அவர். முச்சக்கர வண்டிக்காரர்கள் எதிர் நோக்கி வந்த பல் வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இயலுமான வரை சாதகமான தீர்வுகளை வழங்கியுள்ளார்.நாடு இன்று பாரிய அபிவிருத்திகளைக் கண்டுள்ளது.இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தீய சக்திகள் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் இட்டுச்செல்ல முயற்சிக்கின்றனர்.இவர்களது கனவுகள் ஒருபோதும் நிறை வேறாது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு நாட்டைப் பாதுகாத்து நமது ஜனாதிபதியை மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியக ஆக்குவதன் மூலமே ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிகளிலிருந்து நமது தாய் நாட்டைக் காப்பாற் முடியும். இதனால் எமது சங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்வை ஆதரிக் நா முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இச்சங்கத்தின் செயலாளர்.எமது முச்சக்கர வண்டிகளை முன்னர் ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் திருத்துமிடங்களுக்குக் கொண்டு செல்வோம் அவ்வளவு தூரம் வீதிகள் மோசமாகக்காணப்பட்டன. ஆனால் இன்று சகல வீதிகளும் காபர்ட் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளன.ஜனாதிபதி மஹிந்தவை எதிர்க்கட்சியினர் கார்பட் மஹிந்த என்று கூறுவர் அவர் போட்ட கார்படினால் தான் இன்று எதிர்கட்சிகள் கூட இலேசாக பிரச்சாரப்பணிகளுக்குச் செல்கின்றனர். இன்று நாடு சகல வழிகளிலும் பாரிய அபிவிருத்தியைக் கண்டு செல்கின்றது. எமது சங் கத்தில் கிட்டத்தட்ட 9 லட்சம் குடும்பங்பகள் அங்கத்தவர்களாக இருக்கின்றனர் நாம் பாரிய சக்கியாக இருக்கினறோம் எமது சங்கத்திலுள்ள சகலரும் இம்முறை மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாது.அதற்காகப் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளாம். அத்துடன் நாம் தற்பொழுது எமது முச்சக்கர வண்டிகளில் செல்லும் பிரயாணிகளிடம் பேச்சுக்ளைக் கொடுக்கின்ற போது அவர்கள் சொல்லும் கருத்துக்களைப் பார்த்தால் இம்முறை மஹிந்த ராஜபக்ஷ் 20 லட்சத்திற்கும் அதிகமான மேலதிக வாக்குளால் வெல்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 16ஆம் திகதி எங்களது சங்கத்தின் மகா சம்மேளனம் நடைபெற்றது இதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டபொழுது அனைவரும் அதனை ஏக மனதாக ஏற்றுக்கொண்டனர்.கட்டுநாயக அதிவேகப்பாதை ,தெற்கு அதிவேகப்பாதை போன்ற பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுள்ளதை நாம் மறந்து விட முடியாது.
எதிர்கட்சி வேடபாளர் ஒரு விடயத்தில் ஒன்றைச்சொல்ல மற்ற தலைவர்கள் வேறு ஒன்றைக் கதைக்கின்றனர்.நிறைவேற்று அதிகாரத்தை மாற்றவேண்டும் என ஒருவர் கூற மற்றையவர் நீக்க வேண்டும் என்று சொல்கிறார்.எமக்கு எதிராக சில திட்டங்களை அறிமுகப்படுத்திய முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக இன்று எதிரணியுடன் இணைந்து செயல்படுகிறார் இவர் செய்த சில தேயைற்ற நடவடிக்கையால் அரசாங்கத்தின் மீது முச்சக்கர வண்டிக்காரர்கள் கோபம்கொண்டனர். சுற்றாடலைப்பாதுகாப்பதாகக் கூறி எமது பொருளாதாரத்தில் கை வைத்தார்.மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எமக்குச் செய்த சில சலுகைகளினால் நாம் இன்று நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்,
இதில் இச்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிறியாரத்ன ஊடகச் செயலாளர் நந்தா திஸ்ஸ லங்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Leave a comment