இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வொன்று இன்று 2014.12.22 இலங்கை மன்றக் கல்லூரியில் இடம் பெற்றது.
இங்கு உரையாற்றிய பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று நாடு மிக முக்கியமான கால கட்டதை அடைந்துள்ளது. தேசிய தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள இந்தக்கால கட்டத்தில் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் என்ற ரீதியில் எம் எல்லோருக்கும் ஒரு கடமையும் கடப்பாடும் உள்ளது.அது தான் இந்த நாட்டில் கடந்த 30 வருடங்களுக்கும் அதிகமாக புரை யோடிப்போயிருந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த நாட்டை பாதுகாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை பாதுகாப்பது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும்.இந்தக் கடமையைச் செய்யும் பொருட்டுத்தான் நாங்கள் முன் வந்துள்ளோம்.இந்த நாட்டைப்பாதுகாக்கும் பணியில் இப்பல்கழைக்கழகம் எப்பொழுதும் முன்னின்று செயல் பட்ட வரலாறு உண்டு 1863 ல் ஆரம்பிக்கப்பட் இப்பல்லைக்கழகத்தில் 19 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
நாட்டில் அவ்வப்போது ஏகாதிபத்திய சக்திகள் நாட்டை எப்பொழுதும் பிரித்தாளவே முயற்சிக்கின்றனர். வெ ளி நாட்டுத் தூதரகங்களில் இந்த திட்டங்கள் தீட்டப்படுகின்றன.இந்த சூழ்ச்சியில் உள்ளூர் சக்திகளும் இணைந்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சகல துறைகளில் பாரிய அபிவிருத்திகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக கல்வித்துறை முன்னேற்றப்பட்டுள்ளது. பாலி பௌத்த பீடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய சமயங்களின் பீடங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இதே போன்று யாழ் தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் செல்கிறது இவைகள் எல்லாம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் முன் டுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளாகும்.
இதே போன்று கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்குப்பல்லைக்கழகத்தைச் சேர்நத மாணவர்கள் எமது பல்கலைக்கழகத்திற்கு வந்து கலாசார நிகழ்வுகளில் பங்கு பற்றுகின்றனர். இதனால் சகல சமூகங்ளையும் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விரிவரையாளர்களுக்குமிடையில் நல்லெண்ணமும் புரிந்துணர்வும் ஏற்பட்டுள்ளது.சந்திரிகா ரணில் ஆகியோர் இந்த நாட்டை காட்டிக் கொடுத்தவரகள் . 2002ஆம் ஆண்டு ரணில் புலிகளுடன் ஒப்பந்தம்செய்து நாட்டைக் காட்டிக் கொடுத்து புலிகளுக்கு தனியான ஈழத்தை வழங்கினார்.சந்திரிகா சுனாமி உதவி சபை எனும் பெயரில் ஒன்றை வழங்க முன் வந்தார்.இதே போன்று ஜே.ஆர் 1987ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து நாட்டை இந்தியாவுக்குக் கொட்டிக் கொடுத்தார்.யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகமும் இவர்களால்தான் அழிக்கப்பட்டது.எனவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியர் மயுர சமரகோன், மக்களுக்கு உண்மை சொல்வது கல்வியியலாளர்களின் கடமையாகும்.அபிவிருத்தி தொடர்பாக மஹதிர் முஹம்தையோ. லீகுவான்யவையோ நாம் பின்பற்றத் தேவையில்லை. மாறாக நாம் மஹிந்த சிந்தனையை மட்டும் பின் பற்றினால் போதும் இதுவே எமது நாட்டுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.நல்லாட்சி பற்றிப் பேசுபவர்கள் நீதி மன்றத்தால் தண்டிக்கப் ட்டவர்கள் என்பதை நாம் மறந்து விடவில்லை. முன்னரை விட இப்போது நாட்டில் நல்லாட்சி அமுல்படுத்தப்படு வருகின்றது நீதித்துறை மிகவும் சுதந்திரமாக செயல்படுகின்றது. கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளும் முன்னேற்றமடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார் இதில் பேராசிரியர்களான ஹிரந்த கீதென்த,சுதந்த லியகே,திருமதி யசான்ஞலி ஜயதிலக மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களான எஸ்.உதயகுமார, மாகநாம பஞ்ஞானதேரர்,மெதகொட பே திஸ்ஸ, நிஷாந்த ஹெட்டியாராச்சி உட்பட பலர் கருத்துத் தெரிவித்தார்.
Leave a comment